காதல் வசந்தம்
மீனாட்சி, மெரினாபீச்ரோட்டில் பஸ்ஸில் இருந்து இறங்கியவுடன், அவள் தனது மொபைலை எடுத்துக்கொண்டு தேவனை அழைத்தாள். 'நீங்கள் துடர்புக்கொள்ளும், வாடிக்கையாளர் எண் தர்ப்போது பிஸியாக இருக்கிறது.' என்று தொலைபேசியில் ஒரு குரல் செய்தி வந்தது. அவள் மொபைல் பையில் போட்டுவிட்டு கடற்கரைக்கு நடந்து சென்று, அலைகளை பார்த்துக்கொண்டி ருந்தாள். இரண்டு மூன்று தடவை மொபைலில் முயற்சிகள் செய்தும் லைன் கிடைக்கததால் தனக்கு முன்னால் மோதிய அலைகளை அமைதியற்ற மனதுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். தேவனை காணாமல் பொறுமையின்றி வருத்தமாக அப்பப்போது சாலையை பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது ஒருமுறை திடீரென்று திரும்பிப்பார்த்தப்போது தேவன் தனது கையில் ஒரு சிறிய பரிசுப் பொருலுடன் சற்று வேகமாக நடந்து வருவதை பார்த்தாள். அவள் எழுந்து அவனிடம் நடந்தாள். அவன் அவளுக்கு அந்த பரிசுப் பொருலை ஒப்படைத்து, ஹேப்பி பர்த்டே என்றான். மீனாட்சி பரிசுபொருலை பெற்றுக்கொண்டு நன்றி டியர் எ...